/* */

எப்போதும்வென்றான் அருகே 28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

எப்போதும்வென்றான் அருகே 28 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் : 3 பேர் கைது.

HIGHLIGHTS

எப்போதும்வென்றான் அருகே 28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
X

எப்போதும்வென்றான் அருகே புகையிலை பொருட்கள் பொருட்கள் மற்றும்  காரை செய்த தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருங்குளம் விலக்கு பகுதியில் 28 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக காரில் ஏற்றி வந்த 3 பேரை கைது செய்து அவர்கிடமிருந்த புகையிலை பொருட்கள் மற்றும் காரை செய்த தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் தலைமையில் தலைமை காவலர் குருசாமி ராஜா, காவலர்கள் பாண்டியராஜன் மற்றும் முத்துமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருங்குளம் விலக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் இருந்த மாரியப்பன் (33), த/பெ. பாலசுப்ரமணியன், பெரியார் நகர், குளத்தூர், பொன்னுத்துரை (36) த/பெ. பெத்துபாண்டி, நடுத்தெரு, குளத்தூர், மற்றும் அப்பணசாமி (43) த/பெ. முத்துச்சாமி நடுத்தெரு, அருங்குளம் ஆகிய 3 பேரும் சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான 28 கிலோ புகையிலைப் பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், கைது செய்யப்பட்ட அப்பணசாமி மீது எப்போதுவென்றான் காவல்நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக 4 வழக்குகளும், மாரியப்பன் என்பவர் மீது குளத்தூர் காவல் நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக 3 வழக்குகளும், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஓரு வழக்கும் உள்ளது.

Updated On: 21 Dec 2021 3:14 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...