விளாத்திக்குளம் காவல் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு

விளாத்திக்குளம் காவல் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு
X

சூரங்குடி காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம் மற்றும் சூரங்குடி ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம் மற்றும் சூரங்குடி ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாதம்தோறும் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம். மேலும், அந்தந்த காவல் நிலையப் பகுதிகளில் நடைபெற்ற குற்ற நிலவரங்கள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியும் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்குவது உண்டு.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம் மற்றும் சூரங்குடி ஆகிய காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு அவர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அந்தந்த காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விஜயலெட்சுமி, உதவி ஆய்வாளர் முருகன், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் மாடசாமி, சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture