பிரச்சாரம் செய்யாமல் சென்ற சரத்குமார்- தொண்டர்கள் ஏமாற்றம்

பிரச்சாரம் செய்யாமல் சென்ற சரத்குமார்- தொண்டர்கள் ஏமாற்றம்
X

காலதாமதம் ஆனதால் விளாத்திகுளத்தில் பிரச்சாரம் செய்யாமல் சரத்குமார் சென்றார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் வில்சனை ஆதரித்து, விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட வேம்பார், பெரியசாமிபுரம், இலந்தைகுளம், குளத்தூர், கடலையூர், விளாத்திகுளம் பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்க சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், ஏர்வாடி, சாயல்குடி,கன்னிராஜபுரம், உள்ளிட்ட பகுதிகளில், பிரச்சாரம் செய்வதில் காலதாமதம் ஆனதால், விளாத்திகுளம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள போதிய நேரம் இல்லாததால் இரவு பத்து மணிக்கு மேல் நேரம் ஆனதால் வாகனத்தை நிறுத்தாமல் சரத்குமார் சென்றார். இதனால் சமக மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி தொண்டர்கள், ஏமாற்றமடைந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!