விளாத்திகுளம் அருகே தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு; பாெதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

விளாத்திகுளம் அருகே தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு; பாெதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
X

விளாத்திகுளம் அருகே உள்ள சின்னவநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள தனியார் சோலார் நிறுவனத்தினற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் பாேராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னவநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சின்னவநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள தனியார் சோலார் நிறுவனத்தின் மின்தேவைக்காக நாகலாபுரம் மின்சார வாரியத்தில் இருந்து மின்சாரம் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக நாகலாபுரம் புதூர் வழியாக மின்சார கம்பங்கள் அமைத்து மின் வயர்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

எவ்வித முன் அனுமதி இல்லமால் சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், பணிகளை நிறுத்த வலியறுத்தியும் நாகலாபுரம் மக்கள் அங்குள்ள 135க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்துள்ளது மட்டுமின்றி, நாகலாபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பு நாகலாபுரம், சமத்துவபுரம், ரெட்டியபட்டி, சமத்துவபுரம் கிராமங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்டவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!