விளாத்திகுளம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது - 1.6டன் ரேஷன் அரிசி மற்றும் லோடு ஆட்டோ பறிமுதல்

விளாத்திகுளம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது - 1.6டன் ரேஷன் அரிசி மற்றும் லோடு ஆட்டோ பறிமுதல்
X

விளாத்திகுளம் அருகேயுள்ள ஆற்றங்கரை கிராம பகுதியில் பொது மக்களிடம் ரேஷன் அரிசியை சிலர் குறைந்த விலைக்கு வாங்கி வாகனத்தில் கடத்தி செல்வதாக விளாத்திகுளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவில் சோதனை நடத்தினர். அதில் 40 மூடையில் 1.6டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்நது லோடு ஆட்டோவில் இருந்த இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த முனியசாமி, சண்முகம், மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கதிர்வேல் ஆகிய 3 பேரையும் போலீசார் விசாரணை நடத்தினர்.


விசாரணையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி அதனை வெளிமாநிலங்களுக்கு கோழி தீவனத்திற்கு அனுப்ப இருப்பது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, 1.6டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்




Next Story
ai solutions for small business