M.P.Public Grievance Camp At Vilathikulam 100 நாள் வேலைக்கான சம்பளம் விரைவில் கிடைக்கும்: கனிமொழி எம்.பி. உறுதி

M.P.Public Grievance Camp At Vilathikulam  100 நாள் வேலைக்கான சம்பளம் விரைவில் கிடைக்கும்: கனிமொழி எம்.பி. உறுதி
X

விளாத்திக்குளம் அருகேயுள்ள சிவஞானபுரத்தில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்சியில் பொதுமக்களிடம் இருந்து கனிமொழி எம்.பி. மனுக்களை பெற்றார்.

M.P.Public Grievance Camp At Vilathikulam 100 நாள் வேலைக்கான சம்பளம் விரைவில் கிடைக்கும் என மக்கள் களம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

M.P.Public Grievance Camp At Vilathikulam

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் வட்டத்தில் அமைந்துள்ள சிவஞானபுரம் ஊராட்சியில் நடைபெற்ற 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியின்போது, இரண்டு பயனாளிகளுக்கு ரூ. 55,160 மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, நான்கு பயனாளிகளுக்கு ரூ. 32,250 மதிப்பில் உதவித்தொகை, 6 பயனாளிகளுக்கு ரூ. 2,40,000 மதிப்பில் மகளிர் திட்டம் குழு கடன், 3 பயனாளிகளுக்கு ரூ. 4,646 மதிப்பில் விவசாய இடுபொருள் என 15 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3,32,056 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தருவோம் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்தோம் அதை நிறைவேற்றி காட்டி, இன்று ஒரு கோடிக்கு மேலே பெண்கள் பயன்படக்கூடிய வகையில் மகளிர் உரிமைத்தொகை வழங்கிக் கொண்டு இருக்கும் ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

சில பெண்களுக்கு இன்னும் அந்த உரிமைத் தொகை வரவில்லை என்று ஒரு கோரிக்கை இருக்கிறது, நிச்சயமாக யாருக்கெல்லாம், நியாயமாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.

அதில் உள்ள சில பிரச்னைகளை விரைவில் சரி செய்து எல்லா சகோதரிகளுக்கும் யார் யாருக்கு எல்லாம் உரிமை தொகை கிடைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாம் நிச்சயமாகச் செய்து தருவோம் என்ற உறுதியை நாங்கள் இங்கு அளிக்கிறோம்.

பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்தித்து கொண்டிருக்கக்கூடிய பிரச்சனை, இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய

அரசாங்கத்திடம் இருந்து நமக்கு வந்து சேர வேண்டிய பணம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லை பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடியவர்கள் இன்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து நம்முடைய முதலமைச்சர் இதற்காக வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். விரைவில் அந்த ஊதியம் தரப்படும் என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு வரவேண்டிய அந்த 100 நாள் வேலைக்கான சம்பளம், அந்த ஊதியத் தொகை விரைவில் கிடைத்து விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கனிமொழி எம்.பி. பேசினார்.

மக்கள் களம் நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!