காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு

காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு
X

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் மாயகிருஷ்ணன் (35). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. பெற்றோரின் பாதுகாப்பில் வீட்டில் இருந்த மாயகிருஷ்ணன் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடி வந்த நிலையில் மாயகிருஷ்ணன் கிடைக்காத நிலையில், இன்று ஊரின் அருகே உள்ள கிணற்றினுள் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை பார்த்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் சின்னவன் நாயக்கன்பட்டிக்கு விரைந்து சென்று கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மாயகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சங்கரலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகன் இறந்ததை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!