/* */

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு

விளாத்திகுளத்தில் மனைவியை கொன்ற கணவனுக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
X

ஜீலிபாரத் 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையம் தெருவை சேர்ந்த அருணாதேவிக்கும் திருநெல்வேலி சிவகிரியை சேர்ந்த ஜீலிபாரத் (42) என்பவருக்கும், 2012 ஆண்டில் திருமணமானது. கணவன் - மனைவிக்கு இடையே ஏற்றபட்ட குடும்ப பிரச்சினையால், அருணாதேவி, விளாத்திகுளத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 07.11.2015 அன்று ஜூலிபாரத் தனது மனைவியை பார்க்க விளாத்திகுளத்திற்கு வந்தபோது, அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில், ஜூலிபாரத் தனது மனைவி அருணாதேவியை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார். விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூலிபாரத்தை கைது செய்தனர். இவ்வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் , இன்று ஜூலிபாரத்திற்கு, ஆயுள் தண்டனையும், ரூ.1,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Updated On: 5 Oct 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா