விளாத்திகுளம் அருகே தரைப்பாலம் சீரமைக்க நெற்றியில் நாமமிட்டு நூதன போராட்டம்

விளாத்திகுளம் அருகே  தரைப்பாலம் சீரமைக்க நெற்றியில் நாமமிட்டு நூதன போராட்டம்
X

நெற்றியில் நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட துரைராஜ்நகர் மக்கள்.

விளாத்திகுளம் அருகே தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நெற்றியில் நாமம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட துரைராஜ் நகரில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்த பகுதியில் பொது மக்கள் வசித்து வருகின்றனர். டி.டி.சி.பி என்று அழைக்கப்படும் நகர் ஊரமைப்பு இயக்கத்தில் முறையாக அனுமதி பெறப்பட்டு இப்பகுதியில் பொது மக்கள் வீடுகள் கட்டி குடி இருந்து வருகின்றனர். மேலும் ஊராட்சிக்கும் வரிகளும் செலுத்தி வருகின்றனர்.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகம் இப்பகுதி மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இப்பகுதிக்கு அங்குள்ள தரைப்பாலம் வழியாக தான் பொது மக்கள் செல்ல முடியும்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தரைப்பலம் சேதமடைந்த காரணத்தினால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் தங்களது வீடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தரைப்பாலம் சேதமடைந்த காரணத்தினால் குடிநீர் எடுக்க 3 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தினை கண்டித்து நெற்றியில் நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இனியும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இங்குள்ள குடும்பங்களை காலி செய்ய வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil