/* */

நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 4.0 தொழில்நுட்ப மையம் துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 4.0 தொழில்நுட்ப மையத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 4.0 தொழில்நுட்ப மையம் துவக்கம்
X

நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 4.0 தொழில்நுட்ப மையத்தை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு அரசு டாடா குழுமத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று பார்வையிட்டார்.

தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு டாடா குழுமத்துடன் இணைந்து மாநிலம் முழுவதும் இருக்கின்ற 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிதாக ஒரு தொழில் வளாகம் தொழில் 4.0 ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு 8.06.2023 அன்று 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ. 762.30 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதல் கட்டமாக 21 தொழில்பயிற்சி மையங்களில் தொழில் வளாகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவரை அரசு தொழிற்பயிற்சி மையங்களில் இல்லாத அளவுக்கு 5 டிரேடுகளில் நீண்ட கால பயிற்சியும், 23 டிரேடுகளில் குறுகிய கால பயிற்சியும் அளிக்க இருக்கிறார்கள்.

நவீன தொழில்நுட்பங்களான ரோபோட்டிக்ஸ், 3-டி பிரிண்டிங், மின் வாகனங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 4 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் வளாகம் தொழில் 4.0 நிறுவப்பட்டுள்ளது.

நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மைய கட்டிடடம் ரூ. 3.73 கோடி மதிப்பில் 10572.85 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இ.வி. இயந்திரம், சி.என்.சி. இயந்திரம், வி.எம்.சி. இயந்திரம், லேசர் இயந்திரம், பெயிண்ட் பாத் இயந்திரம், ரோபோட்டிக்ஸ் இயந்திரம், பிளம்பிங் இயந்திரம், ஆட்டோ எம்.ஆர்.ஓ. மற்றும் பி.சி. இயந்திரம் ஆகிய 8 வகையான இயந்திரங்களுக்கான பணிமனை இ வி.டி.ஏ.டி. ஸ்டூடியோ, கூட்டரங்கம், சர்வர் அறை, வி.எஸ்.ஏ.டி. வகுப்பறை, ஐ.ஓ.டி. வகுப்பறை, பி.வி.ஏ. இயந்திர வகுப்பறை, பி.டி.டி. வகுப்பறை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய காலகட்டத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்த மாணவர்கள் வேலை தேடி பெரிய நிறுவனங்களுக்கு செல்லும்போது அங்குள்ள புதிய தொழில்நுட்பங்களை படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். இன்றைய தினம் முதல் நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் எல்லாம் தொழில் 4.0 மூலம் நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலேயே படிக்க முடியும். குறுகிய காலஇ நீண்ட கால பயிற்சிகளின் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நாகலாபுரத்திலேயே மாணவர்களுக்கு பயிற்சிகள் கிடைத்துவிடும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துகுமாரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Aug 2023 1:17 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  2. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  3. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  6. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  7. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  8. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  9. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு