மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு சிறை
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 வருடம் சிறைதண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் அருகேயுள்ள மணப்பாடு புதுக்குடி மேற்கு பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் லாரன்ஸ் (39). இவரது மனைவி சியாமளா (32). இந்த தம்பதியருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி 8 வருடங்களாக குழந்தை இல்லை என்று கூறி லாரன்ஸ் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவி சியாமளாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.இதனால் மனவேதனையடைந்த சியாமளா கடந்த 20.10.2014 அன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை கொண்டுள்ளார். இதுகுறித்து குலசேகரபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரன்சை கைது செய்தனர். இவ்வழக்கில் தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன், மனைவியை தற்கொலைக்கு தூண்டிய லாரன்ஸ்க்கு 10 வருட சிறைதண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து, தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்ட அப்போதைய குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அரசு வழக்கறிஞர் சுபாஷினி, தற்போதைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் காவலர் தங்கபாண்டி ஆகியோரை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu