குடிபோதையில் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் கைது

குடிபோதையில் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட அடைக்கலம்.

குடிபோதையில் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதூர் குளக்கட்டான்குறிச்சி பகுதி கீரைத்துறை தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் அடைக்கலம்(28).

இவரது மனைவி சின்னலெட்சுமி(22). இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் அடைக்கலம் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் சின்னலட்சுமி அடைக்கலத்தை சத்தம் போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அடைக்கலம் இன்று குடிபோதையில் மனைவி சின்னலெட்சுமியை அரிவாளால் தாக்கி கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதுகுறித்து, சின்னலெட்சுமி அளித்த புகாரின் பேரில் புதூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் அனிதா வழக்குப்பதிவு செய்து அடைக்கலத்தை கைது செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!