அரசு ஊழியர்களிடம் அவதூறு பேச்சு -இளைஞர் மீது வழக்கு

அரசு ஊழியர்களிடம் அவதூறு பேச்சு -இளைஞர் மீது வழக்கு
X

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாஸ்க் அணியாத இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் தீவிரமாக அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விளாத்திகுளம் நகர பகுதியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். அப்போது அயன் பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்ற இளைஞர் மாஸ்க் அணியாமல் இருப்பதை கண்டு பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் அவரிடம் மாஸ்க் அணியாததற்க அபராதம் கேட்டுள்ளனர்.

அதனை தர மறுத்ததோடு மட்டுமின்றி பேரூராட்சி ஊழியர்களை அவதூறாக பேசியுள்ளார் என விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பேரூராட்சி நிர்வாக அலுவலர் சுந்தரவேல் புகார் செய்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் விளாத்திகுளம் போலீசார் மகேஸ்வரன் என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil