/* */

விளாத்திகுளம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் பெண் புள்ளிமான் படுகாயம்

விளாத்திகுளம் அருகே நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த பெண் புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் அதிகமாக புள்ளி மான்கள் காணப்படுகிறது. சில நேரங்களில் புள்ளி மான்கள் தண்ணீர் அருந்துவதற்காக காட்டுபகுதியில் இருந்து வெளியே வந்து வாகனங்களில் அடிப்பட்டோ அல்லது நாய்கள் கடித்தோ உயிரிழக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் விளாத்திகுளம் அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்திலுள்ள கண்மாய்க்கு தண்ணீர் குடிக்க வந்த 2 வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்றினை அக்கிராமத்திலுள்ள 4 நாய்கள் சேர்ந்து கடித்துக் குதறியுள்ளது. நாய்களிடம் புள்ளி மான் சிக்கித்தவித்து கொண்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி விட்டு, படுகாயமடைந்த பெண் புள்ளிமானை மீட்டு, ஆட்டோவில் ஏற்றி வந்து விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

பின்னர் விளாத்திகுளம் வனத்துறையினர், கால்நடை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தரின் பேரில், கால்நடை மருத்துவ மருத்துவரினால் பெண் புள்ளிமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து 2 வயதுடைய பெண் புள்ளிமான் பாதுகாப்பாக, விளாத்திகுளம் வனத்துறையினரால் கோவில்பட்டி குருமலை வனப்பகுதியில் விடப்பட்டது. மேலும், விளாத்திகுளம் வைப்பாற்றுப்படுகையில் அதிகப்படியான மான்கள் இருப்பதால், அரசு மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் மான்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 10 Nov 2021 9:21 AM GMT

Related News