விளாத்திகுளத்தில் பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளத்தில் பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

விளாத்திகுளத்தில் பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

செண்பகவல்லி அணையை சீரமைக்க வலியுறுத்தி விளாத்திகுளத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து மத்திய அரசு பேச வேண்டும். 2020-2021-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையையும், நிவாரணமும் வழங்க வேண்டும். காம்ப்ளக்ஸ், பொட்டாஸ் ஆகிய உரங்களின் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும்.

ராபி பருவம் தொடங்க உள்ளதால், உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதூர் ஒன்றியத்தில் 2015-16-ம் ஆண்டுக்கான மிளகாய் பயிர் செய்த விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள செண்பகவல்லி அணையை சீரமைத்து, வைப்பாற்றில் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி விளாத்திகுளத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்மண்டல அமைப்புச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், வேளாண் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் பொன்ராஜ், கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் தாமோதர கண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!