/* */

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வேலைவாய்ப்பு!

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வேலைவாய்ப்பு வழங்கப்படுதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில்  வேலைவாய்ப்பு!
X

விளாத்திகுளத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக செயல் அலுவலர் கண்ணன், தக்கார் சிவகலைப்பிரியா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள மேளம், காவல் ஆகிய 2 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ளது. அதில் பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி உள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 08.08.2021- ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச் சான்றுகளுடன் செயல் அலுவலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் விளாத்திகுளம் நகர் மற்றும் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதர விவரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தகுதிகள் : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசையில் பள்ளியில் பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

18 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.ஊதிய விகிதம் : 2300 -7400 ( நிலை 1, தளம் 1)

Updated On: 9 July 2021 7:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  8. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  9. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  10. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி