விளாத்திகுளம் அருகே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி

விளாத்திகுளம் அருகே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி
X
தனது குடும்பத்தினர் கவனிக்கவில்லை, தனக்கு மதிப்பு இல்லை என்று மனவேதனையில் நகையும் காணமால் போனதால் தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் காமராஜர் தெருவினை சேர்ந்தவர் பச்சக்காளை. இவரது மனைவி காசியம்மாள் (70). இந்த தம்பதிக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

விவசாயியான பச்சக்காளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார். 4 மகன்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். மற்ற 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் என எல்லோரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். புதூரில் காசியம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். தன்னுடைய குழந்தைகள் எல்லோரும் நல்ல வசதியாக இருந்தும் கடைசிக்காலத்தில் தன்னை கவனிக்கவில்லை என்ற மனவேதனை காசியம்மாளுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காசியம்மாள் அவரது உறவினர் ஊரான விளாத்திகுளம் அயன்பொம்மையாபுரத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றபோது, காசியம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தன்னை யாரும் கவனிப்பது இல்லை, மதிப்பு இல்லை, தற்பொழுது நகையும் காணவில்லை என்ற மனவேதனையில் இருந்த காசியம்மாள் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த மண்ணெணெயை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் கிடைத்தும் புதூர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காசியம்மாள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தனக்கு மதிப்பு இல்லை, நகை காணமால் போய்விட்டது என்ற மனவேதனையில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்புடுத்தியுள்ளது.

Tags

Next Story
ai marketing future