தொடர் மழை எதிரொலி: விளாத்திகுளம் பகுதியில் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம்

தொடர் மழை காரணமாக விளாத்திகுளம் பகுதிகளில் 1800 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சூரங்குடி குளத்தூர், புளியங்குளம், வேடபட்டி, விருசம்பட்டி, வேடநத்தம், பூசனூர் ஆகிய பகுதிகளில் இந்தாண்டு ராபி பருவத்தில் சுமார் 1800 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் உளுந்து, கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு,மிளகாய் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து இருந்தனர். ஏற்கனவே புரட்டாசி மாத மழையினை நம்பி பயிர் செய்து இருந்தனர். ஆனால் அப்போது மழை பெய்து போனதால் செடிகள் கருகி போய் சேதமடைந்தனர்.

இது போன்று 2 முறை விதைகள் விதைப்பு செய்து கருகிபோனதால் நம்பிக்கையுடன் 3 வது முறையாக விவசாயிகள் விதைப்பு பணிகள் மேற்;க்கொண்டனர். செடிகளும் நன்கு வளர்ந்து வந்த நிலையில் இம்முறை தொடர் மழையினால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமான மழை பெய்த இடங்களில் சூரங்குடி, குளத்தூர் பகுதிகளும் அடங்கும். தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடிய வாய்ப்பு இல்லமால் தொடர்ந்து மழை பெயது வருவதால் சுமார் 1800 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றிலுமாக மழைநீரில் தேங்கி அழுகி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் அதிக மழை நீரால் பல நிலங்களில் பயிர்கள் அடித்து செல்லப்பட்டு மழைநீர் மட்டும் நிலங்களில் காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 3 முறை விதைப்பு செய்து 2 முறை வறட்சியின் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது தொடர் மழையினால் பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளதால் ஒரு ஏக்கர் 60 ஆயிரம் வரை செலவு செய்து கடுமையான நஷ்டத்தினை சந்திள்ளதால் அரசு உதவிக்காரம் நீட்ட வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future