கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் தலைவர் சுந்தரவேல் முன்னிலையில் வியாபாரிகள் வர்த்தக சங்கம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினருக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் விளாத்திகுளம் அக்கம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி., பிரகாஷ் வியாபாரிகளுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கொரோனா பரவலை தடுக்க அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகள் குறித்தும், மேலும் கொரோனா நோயை தடுக்க நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்கள்.விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், விளாத்திகுளம் வியாபாரி சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu