மக்கள் கோரிக்கை வைக்காத திட்டங்களையும் நிறைவேற்றும் முதல்வர்; கனிமொழி பெருமிதம்

அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து, குழந்தைகளுடன் கனிமொழி எம்.பி. உரையாடினார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியம், மேல்மாந்தை கிராமம், கீழவிளாத்திகுளம் ஊராட்சி ஆண்டிரெட்டியாபுரம் ஓடை கிராமம் மற்றும் பிள்ளையார்நத்தம் ஊராட்சி கே.குமரெட்டையாபுரம் கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடைகள், எம். சண்முகபுரம் ஊராட்சி வடக்குச்செவல் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம், எட்டையாபுரம் தேர்வுநிலை பேரூராட்சி காலணி தெரு மற்றும் 15 ஆவது வார்டு ஆகிய இடங்களில்; சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஆகியவற்றை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி. பேசியதாவது:
மக்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு திட்டங்களை நிறைவேற்றக்கூடிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் கோரிக்கைகள் வைக்காமலேயே திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறார். விரைவில் சமுதாய நலக்கூடத்தில் சமையலறை கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
மத்திய அரசின் திட்டத்தின் மூலம் பொது கழிப்பறை வசதி மற்றும் ஊராட்சி நிதியில் இருந்து உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பேரறிஞர் அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று கூறியதுபோல மக்களின் மகிழ்ச்சிதான் ஒரு நல்ல ஆட்சிக்கு கிடைக்கும் சான்றிதழாகும் என, கனிமொழி எம்.பி. பேசினார்.
நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu