விளாத்திகுளத்தில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்பதை ஏற்பதை முன்னிட்டு விளாத்திகுளத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு திமுக தொண்டர்கள் சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஸ்டாலின் வாழ்க என வாழ்த்தி கோஷமிட்டனர்.

மேலும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற மார்க்கண்டேயனை கௌரவிக்கும் விதமாக சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைத்து இருந்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு