மிளகாய் பறித்து வாக்காளர்களை கவரும் வேட்பாளர்

மிளகாய் பறித்து வாக்காளர்களை கவரும் வேட்பாளர்
X

விளாத்திகுளம் அருகே மேல்மாந்தையில் அமமுக வேட்பாளர் சீனிச்செல்வி மிளகாய் பறித்து கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் சீனிச்செல்வி இன்று விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார், பெரியசாமிபுரம், மேல்மாந்தை, சண்முகபுரம் சூரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மிளகாய் பழங்கள் பறித்துக் கொடுத்தபடி நூதன முறையில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் கிராமத்தில் உள்ள பொதுமக்களை சந்தித்தும் திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறும் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்