எட்டயபுரத்தில் பாஜக சார்பில் தூய்மை பாரத திட்ட உறுதிமொழி ஏற்பு

எட்டயபுரத்தில் பாஜக சார்பில் தூய்மை பாரத திட்ட உறுதிமொழி ஏற்பு
X

பாரதியார் மணிமண்டபத்தில் நடந்த,  தூய்மை பாரத திட்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், தமிழக பாஜக மாநில இணை பார்வையாளர் சுதாகர்ரெட்டி தலைமையில் பாஜகவினர் உறுதி மொழி ஏற்றனர்.

விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பில், பாரதியார் மணிமண்டபத்தில் தூய்மை பாரத திட்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை, பாரதிய ஜனதா கட்சியினர் சேவா தினமாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில், பாஜக சார்பில் தூய்மை பாரத நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக பாஜக மாநில இணை பார்வையாளர் சுதாகர்ரெட்டிக்கு, தொழிலதிபர் சீனிவாசன் தலைமையில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து எட்டயபுரம் பாரதி மணி மண்டபத்தில் அமைந்துள்ள பாரதி சிலைக்கு, பாஜக இளைஞரணி தேசிய துணை தலைவர் முருகானந்தம் தலைமையில் சுதாகர்ரெட்டி மாலையணிவித்து மரியாதை செய்தார்.

மண்டபத்தில் அமைந்துள்ள பாரதி குறித்த புகைப்படங்களை பார்வையிட்டு சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது குறித்து சுதாகர் ரெட்டி தலைமையில் பாஜகவினர் உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் வர்த்தகப்பிரிவு மாநில பொறுப்பாளர் ராஜாகண்ணன், வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொது செயலாளர் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் ஆத்திராஜ், அமுதாகணேசன் , மாவட்ட மகளிரணி தலைவர் லீலாவதி, எட்டயபுரம் ஒன்றிய தலைவர் ராம்கி, கோவில்பட்டி நகர தலைவர் பாலா உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products