சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.3.5 லட்சம் பறிமுதல்

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.3.5 லட்சம் பறிமுதல்
X

விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சார் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ 3,49,160 பணத்தினை கைப்பற்றினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி.ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தினை மூடிவிட்டு உள்ளே வைத்து ஊழியர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் சார்பதிவாளர் ரவிச்சந்தரின் சாப்பாட்டு பேக்கில் இருந்தது ரூ 3,40,000, அவரது டேபிளில் இருந்து ரூ. 9,160ம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளனர்.கைப்பற்றப்பட்ட பணம் குறித்து ரவிச்சந்தர் மற்றும் ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தப் பணம் கணக்கில் காட்டப்படாத பணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேற்கட்ட விசாரணைக்காக ரவிச்சந்தர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த சோதனை காரணமாக விளாத்திகுளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai ethics in healthcare