விளாத்திகுளத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை 41 பேர் கைது : 794 மதுபாட்டில்கள் பறிமுதல்

விளாத்திகுளத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 41 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 794 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உஷார் நிலையில் வாகன தணிக்கை, மார்க்கெட் ரோந்து மற்றும் மதுவிலக்கு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாளை 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த வகையில் விளாத்திகுளத்தில் 9 வழக்குகள், சூரங்குடி 4, எட்டயபுரம் 8, எப்போதும்வென்றான், குளத்தூர் தலா 6, புதூர், மாசார்பட்டி, தருவைகுளம், சங்கரலிங்கபுரம் தலா 2 என மொத்தம் 41 வழக்குகள் பதிவு செய்து 794 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!