விளாத்திகுளம் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

விளாத்திகுளம் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
X

தமிழக சட்டமன்ற தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜிவி மார்க்கண்டேயன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அம்பாள்நகா் ஜிவி மஹாலில் நடைபெற்ற செயல்வீரா்கள் கூட்டத்தில் தி.மு.க மாநில மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி கருணாநிதி, விளாத்திக்குளம் வேட்பாளர் ஜிவி மார்க்கண்டேயனை அறிமுகப்படுத்தி பேசினார்.தொடா்ந்து விளாத்திகுளம் தாலூகா அலுவலகத்தில் ஜிவி மார்க்கண்டேயன் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக தேர்தல் காரியாலயம் திறப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story