மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்கள்: ஸ்டாலினுக்கு மீனவர் சங்கம் வரவேற்பு
தூத்துக்குடியில் அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் ஆன்டன் கோமஸ் பேட்டியளித்தார்.
தமிழக சட்டசபையில் மீனவர் நலனிற்கு பல்வேறு சலுகைகள் அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் சங்கம் நன்றி தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் ஆன்டன் கோமஸ் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் நடைபெற்ற மீனவர் மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறைப்படுத்தும் விதிகளின்படி மீன் பிடி களங்களுக்கான உரிமம் ஆண்டுதோறும் புதுப்பிக்கும் முறையை மூன்று ஆண்டுகளாக மாற்றி இருப்பது மீனவர்கள் இயற்கை மரணத்தின் போது வழங்கப்படும் உரிமைத்தொகை 15000 ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது, கடலில் காணாமல் போன குடும்பத்திற்கு உதவித்தொகை நாள் ஒன்றுக்கு 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய் உயர்த்தி மாதம் 10 ஆயிரத்து 500 ரூபாய் ஆக உயர்த்தி உள்ளது உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
மேலும், 75 சதவீதம் மானியத்தில் பத்தாயிரம் மீனவர்களுக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ள உயிர் காப்பு கவசம் அனைத்து மீனவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் ,மீன்பிடி உபகரணமாக உள்நாட்டு மீனவர்களுக்கு 50 சதவீத ஆணை வழங்க திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் கடல் அரிப்பில் இருந்து மீனவர் வாழ்விடங்களை காக்க குமரி மாவட்டம் இறையமன்ன துறை, அன்னை நகர், மேகடியப்பட்டணம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், மேற்கு வாடி, ரோச்மாநகர், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, அமலி நகர் ஆகிய பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க உறுதி செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி புன்னக்காயலில் மீன் வலை பின்னும் கூடும் ஏலக்கூடம் உட்புற கட்டமைப்பு சாலை தண்ணீர் கொண்டு 10 கோடி ரூபாயும், வீரபாண்டியபட்டினம் மற்றும் பெரியதாழை மீனவ கிராமங்களில் மீன் இறங்குதளம் அமைப்பதற்கான அறிவிப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளத்துறை அமைச்சர் அவரது தொகுதி மக்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மீனவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu