தூத்துக்குடி அருகே 13 பைக்குகள் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

தூத்துக்குடி அருகே 13 பைக்குகள் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
X

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனங்கள் திருடியதாக கைது செய்யப்பட்ட ராமசுப்பு மற்றும் ஆறுமுகம்.

தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த சித்ரா பௌர்ணமி விழாவில் இரண்டு இருசக்கர வாகனங்கள் திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையில் இன்று செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காசிராஜன், ராமகிருஷ்ணன், பிரேம்குமார், குணசேகரன், தலைமைக் காவலர்கள் வேம்பு, ஆனந்தராஜ், முதல்நிலை காவலர் சுப்பிரமணியன் ஆகியோர் கருங்குளம் அருகே உள்ள தாதன்குளம் ரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இரண்டு பேர் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக சென்றனர். அந்த இருவரும் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் வெள்ளூர் கீழத்தெருவைச் சேர்ந்த ராமசுப்பு மற்றும் இலுப்பைகுளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் விசாரணைக்காக காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருநெல்வேலி மாநகரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 21 இருசக்கர வாகனங்களை திருடி விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையெடுத்து, அவர்களிடம் இருந்து முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 13 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டு உள்ளனர். தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings