பெட்ரோல், டீசல்,விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல்,விலை உயர்வை கண்டித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X
தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இன்று (27.06.2021) தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் மக்கள் நீதி மய்யம் விஜயகாந்த், சுப்பிரமணியன், கணேசன், நல்லசிவம், ராமராஜன், கருப்பசாமி, பிரிட்டோ, சிவக்குமார், மாரிமுத்து, அர்ஜுன், கமல் மூர்த்தி மற்றும் தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்க பேரவை சேர்ந்த ராஜன், பரமசிவம், சபரி, வசந், பாண்டி, விசு, சங்கர், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!