தூத்துக்குடி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவி உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவி கனிச்செல்வி.
Tuticorin Near 2 persons drown
தூத்துக்குடி அருகே உள்ளது மேல மருதூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சிறிய குளத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக நிரம்பி காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து குளத்தில் ஏராளமானோர் குளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மேலமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மேனகா மற்றும் அவரது உறவினரான இளம்பெண் கலைச்செல்வி, கல்லூரி மாணவி கனிச்செல்வி ஆகியோர் குளத்திற்கு குளிக்க சென்று உள்ளனர் இதில் மாணவி மேனகா குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளார்.
அப்போது, அவர் திடீரென நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார் அதனைக் கண்டதும் கலைச்செல்வி மற்றும் கல்லூரி மாணவி கனிச்செல்வி ஆகியோர் அவரை மீட்க போராடி உள்ளனர். இதில் மாணவி மேனகா மற்றும் இளம்பெண் கலைச்செல்வி ஆகியோர் குளத்தின் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குளத்தின் ஆழமான பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கனிச்செல்வியை அருகே இருந்த கிராம மக்கள் போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அவசர பிரிவில் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நீரில் மூழ்கி உயிரிந்த பள்ளி மாணவி மேனகா, இளம்பெண் கலைச்செல்வி ஆகியோரின் உடல்களை காவல் துறையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவி மற்றும் இளம்பெண் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தருவைக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu