தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் அக். 29 இல் மாநில செஸ் போட்டி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் செயலாளர் சோமு, முதல்வர் பூங்கொடி மற்றும் சதுரங்க கழக நிர்வாகிகள் பேட்டியளித்தனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டிகள் அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெறுவது குறித்து, காமராஜ் கல்லூரி செயலாளர் சோமு, முதல்வர் பூங்கொடி, மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி அக்டோபர் 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. ராபிட் எனப்படும் விரைவுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கு பெறலாம். சதுரங்க வீரர்கள், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தப் போட்;டிகள் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிகள் 9 வயதிற்குட்பட்டோர், 11 வயதிற்குட்பட்டோர், 13 வயதிற்குட்பட்டோர், 15 வயதிற்கு உட்பட்டோர் என 4 பிரிவுகளாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுப்பிரிவாக அனைத்து வயதினருக்கும் என ஐந்து பிரிவுகளாக நடைபெற இருக்கிறது.
அக்டோபர் 29 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு முதல் சுற்று போட்டிகள் ஆரம்பமாகும். மாணவ, மாணவியர் பிரிவில் பங்குபெறும் அனைவரும் வயதிற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுக் கட்டணம் செலுத்தி பெயரைப் பதிவு செய்வதற்கு அக்டோபர் 26ஆ ம் தேதி கடைசி நாள் ஆகும்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் முதல் மாணவர் மற்றும் முதல் மாணவிக்கு மிதிவண்டி (சைக்கிள்) பரிசாக வழங்கப்படும். இரண்டாம் பரிசு பெறும் மாணவன், மாணவிக்கு சதுரங்க கடிகாரம் பரிசாக வழங்கப்படும். மொத்தம் 8 மிதிவண்டிகளும், 8 சதுரங்க கடிகாரங்களும் பரிசாக வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களுக்கு 15 பரிசுகளும், மாணவிகளுக்கு 10 பரிசுகளும் சேர்த்து மொத்தம் 120 பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட இருக்கிறது.
பொதுப்பிரிவு போட்டியில் வெற்றிபெறும் முதல் 15 நபர்களுக்கு ரொக்கப்பரிசாக ரூ. 16,000 வழங்கப்பட இருக்கிறது. பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியாளர்கள் அனைவரும் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.150 தொகையை இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் நுழைவுக் கட்டணமாக ரூ.150- மட்டும் செலுத்தி போட்டியில் பங்குபெறலாம். மற்ற அனைவரும் நுழைவுக் கட்டணமாக ரூ. 300 www.chessfee.com, www.easypaychess.com, www.signinchess.com ஆகிய இணையதளங்களில் செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு 9865830030, 8925788874, 9894542121, 9487703266, 9894690574, 96983 95983 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
பேட்டியின்போது, மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஜோ பிரகாஷ், துணைத்தலைவர் செந்தில் கண்ணன், துணைத் தலைவர்கள் ரைபின், மைக்கேல் ஸ்டேனிஷ் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu