நள்ளிரவில் விசிட் அடித்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நள்ளிரவில் விசிட் அடித்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நள்ளிரவு திடீரென ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நள்ளிரவு திடீரென சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, கொலை, கொலை முயற்சி, கொள்ளை, புகையிலைப் பொருட்கள் விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தில் இரவு நேர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போலீசாரின் நடவடிக்கைகளை அடிக்கடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேற்று நள்ளிரவு புதுக்கோட்டை, தெய்வச்செயல்புரம், வல்லநாடு, மணக்கரை, ஆழ்வார்கற்குளம், தோழப்பன்பண்ணை, பேட்மாநகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரோந்து சென்று போலீசாரின் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, ஆங்காங்கே இரவு ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுரைகள் அவர் வழங்கினார்.


இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 5 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 45 மனுதாரர்கள் என மொத்தம் 50 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!