கொட்டும் மழையில் தூத்துக்குடி பேருந்துக்குள் குடை பிடித்து பயணித்த அவலம்

கொட்டும் மழையில் தூத்துக்குடி பேருந்துக்குள் குடை பிடித்து பயணித்த அவலம்
X

தூத்துக்குடியில் அரசுப் பேருந்தில் குடைபிடித்தபடி பயணித்த நபர்.

தூத்துக்குடியில் அரசுப் பேருந்தின் மேற்கூரை ஓட்டை வழியே மழைநீா் ஒழுகியதால் பயணிகள் சிலர் பேருந்துக்குள் குடைபிடித்து சென்றனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கடற்கரை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, தற்போது உருவாகியுள்ள மிதிலி புயல் காரணமாக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

இந்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது என்றே கூறலாம். குறிப்பாக பேருந்துகளில் பயணிப்போரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது என்பதை ஆங்காங்கே காண முடிகிறது. இதற்கெல்லாம் முன்னுதாரமணமாக தூத்துக்குடியில் பயணிகள் சிலர் அரசுப் பேருந்தில் குடிபிடித்து பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மேலும், இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு அத்திமரப்பட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மேற்கூரையின் வழியாக மழைநீா் பேருந்தின் உள்ளே ஒழுகி இருக்கைகளில் கொட்டியதால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

ஒரு சிலா் பேருந்துக்குள் குடைபிடித்தபடி பயணம் செய்தனா். பெரும்பாலானோா் மழையில் நனைந்த படியும், பேருந்துக்குள் ஓரமாக ஒதுங்கி நின்றும் பயணித்து உள்ளனா். மேலும், ஓட்டுநர் இருக்கையின் மீதும் மழைநீர் ஒழுகியதால் பின்னால் இருந்து பயணி ஒருவர் குடை பிடித்து அவரை நனையாமல் பார்த்து கொண்டார்.‌

தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. எனவே பழுதான பேருந்துகளை அகற்றி புதிய பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!