திருச்செந்தூர் கோயில் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

திருச்செந்தூர் கோயில் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
X

உயிரிழந்த இளைஞர் பிரசாத்தின் தந்தை ஜோதிபாஸிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் புறக்காவல் நிலையம் முன்பு வைக்கப்பட்ட மின் எர்த் பைப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் புறக்காவல் நிலையம் முன்பு வைக்கப்பட்ட மின் எர்த் பைப்பில் மின் கசிவு காரணமாக மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் ஜோதிபாஸ். இவர் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 7 பேருடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

குடும்பத்துடன் அவர் கடலில் புனித நீராடி உள்ளார். கடலில் புனித நீராடி விட்டு ஜோதிபாஸின் மகன் பிரசாத் (22) கோயில் புறக்காவல் நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த மின் எர்த் பைப்பில் அருகே அமர்ந்துள்ளார். அப்போது மின் கசிவு ஏற்பட்டு பிரசாத் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனையடுத்து அவரை காப்பாற்ற சென்ற தந்தை ஜோதிபாஸ் மீதும் லேசாக மின்சாரம் தாக்கியுள்ளது. இந்த நிலையில் அங்கு இருந்த பக்தர்கள் மற்றும் போலீசார் பிரசாத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு இளைஞர் பிரசாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கோவில் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லக் கூடிய கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் மின்சாரம் பாய்ந்து பிரசாத் உயிரிழந்ததாக அவரது தந்தை ஜோதிபாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!