திருச்செந்தூர் அருகே தொழில் நஷ்டம் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செந்தூர் அருகே தொழில் நஷ்டம் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
X
திருச்செந்தூர் அருகே தொழில் நஷ்டம் காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் அருள்குமரன் (25). இவர் பிலிம் டெக்னாலஜி படித்து முடித்துவிட்டு திருச்செந்தூரில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். அதில் இவருக்கு ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் விரக்தியில் இருந்து வந்தார். தினமும் இவர் அதிகாலை 3 மணிக்கு தூங்கி விட்டு பகலில் எழுந்திருப்பது வழக்கமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு தனது அறையில் தூங்கச் சென்றவர் மதியம் வரை வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாயார் நாகரத்தினம் அறையின் கதவை திறந்து பார்த்தார். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் அருள்குமரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாகரத்தினம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story