திருச்செந்தூர் அருகே பழிக்குப்பழியாக வியாபாரி கார் ஏற்றிக் கொலை

திருச்செந்தூர் அருகே பழிக்குப்பழியாக வியாபாரி கார் ஏற்றிக் கொலை
X

கொலை செய்யப்பட்ட வியாபாரி வேம்படிதுரை.

திருச்செந்தூர் அருகே பழிக்குப் பழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி கார் ஏற்றி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரத்தை சேர்ந்தவர் வேம்படிதுரை (வயது 40). இவர் சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவரது உறவினர் ஒருவர் இறந்த நிலையில், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேம்படிதுரை இன்று சொந்த ஊரான வன்னிமாநகரத்துக்கு வந்து உள்ளார்.

இறந்த உறவினர் உடல் அடக்கம் முடிந்த பிறகு வன்னிமாநகரம் வள்ளிவிளை சாலையில் உள்ள தோட்டத்தில் குளித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வேம்படிதுரை வீடு திரும்பி கொண்டிருந்தாராம். அப்போது ஏதிரே வந்த கார் வேம்படிதுரை சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட வேம்படிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இருசக்கர வாகனம் மீது மோதிய கார் சாலையோர மணலில் புதைந்து சரிந்து நின்றது. இதனால் காருக்குள் இருந்தவர்கள் காரை வெளியே எடுக்க முடியாமல் அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் வேம்படித்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த 2016 ஆம் ஆண்டு வன்னிமாநகரத்தை சேர்ந்த சிவகுரு என்ற சிவலட்சம் கொலை வழக்கில் வேம்படிதுரை கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது என தெரியவந்தது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சிவகுரு என்ற சிவலட்சத்தின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் பழிக்கு பழியாக வேம்படிதுரை மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!