திருச்செந்தூர் கோயிலில் செப்டம்பர் மாதம் ரூ. 2.93 கோடி உண்டியல் வசூல்
திருச்செந்தூர் முருகன் கோயில். (கோப்பு படம்).
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், ஆவணித் திருவிழா, கந்த சஷ்டி விழா ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறுவது உண்டு.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தவது வழக்கம்.
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சையாக கோயில் உண்டியலில் பணம், தங்கம் உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்துவது உண்டு. அவ்வாறு பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது.
அதன்படி செப்டம்பர் மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை என்னும் பணியானது கோயில் வசந்த மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக்குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்ப் பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஆகியோர் ஈடுப்பட்டனர்.
காணிக்கை எண்ணும் பணி முடிவடைந்த நிலையில், செப்டம்பர் மாதம் வருவாயாக 2 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரத்து 32 ரூபாய் பணமும், தங்கம் 2100 கிராமும், வெள்ளி 19,000 கிராமும், 424 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu