திருச்செந்தூரில் போலி பத்திரம் மூலம் ரூ. 10 லட்சம் நில மோசடி வழக்கில் இருவர் கைது

திருச்செந்தூரில் போலி பத்திரம் மூலம் ரூ. 10 லட்சம் நில மோசடி வழக்கில் இருவர் கைது
X
திருச்செந்தூர் பகுதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரம் மூலம் மோசடி செய்த வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது ஜெமீல் என்பவர் கீழதிருச்செந்தூர் கிராம சர்வே எண்: 983 மற்றும் 984 ஆகியவற்றில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 4 ஏக்கர் 9 செண்ட் நிலத்தை கிரைய ஆவண எண் 513/1982 இன் படி கடந்த 21.05.1982 அன்று மீரான் சாகிபு என்பவரிடம் இருந்து கிரையம் பெற்று அனுபவம் செய்து வந்துள்ளார்.


இதற்கிடையே, முகமது ஜெமீல் கடந்த 1987 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு அந்த சொத்தை அவரது மகன் முகமது நூகு தம்பி மற்றும் அவருடன் உடன்பிறந்தோர் அனுபவம் செய்து வந்தனராம். இந்த நிலையில், உடன்குடி, கிறிஸ்டியாநகரம் கோலாப் தெருவை சேர்ந்த செல்வகுமார் (38) மற்றும் சிலர் சேர்ந்து 4 ஏக்கர் 9 செண்ட் நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இறந்துபோன முகமது ஜெமீல் போன்று வேறு ஒருவரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து கடந்த 29.09.2020 அன்று மோசடியாக பவர் பத்திர பதிவு செய்துள்ளனர்.

செல்வக்குமார் பெயருக்கு மோசடியாக பத்திரப் பதிவு நடைபெற்ற நிலையில், அந்த மோசடி பொது அதிகார ஆவணத்தில் மந்திரமூர்த்தி மற்றும் ஸ்ரீமுருகன் ஆகியோர் சாட்சியாக கையொப்பம் செய்து உள்ளார்கள். பின்னர், செல்வகுமார், ஐகோர்ட்துரை என்பவருக்கு கிரைய ஒப்பந்தம் ஏற்படுத்தி, அதன் பின்னர் அதை ரத்து செய்துவிட்டு திருச்செந்தூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கிரையம் செய்து கொடுத்து உள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட முகமது நூகு தம்பி கடந்த 27.04.2022 அன்று தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு கடந்த 04.01.2023 அன்று செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதனையடுத்து, போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஆள்மாறாட்ட நபரான திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது பாரூக் (53) மற்றும் ஆள்மாறாட்டத்திற்கு உடந்தையாக செயல்பட்ட தூத்துக்குடி உடன்குடி காலங்குடியிருப்பு பகுதியை சேர்ந்த செய்யது நூர் பிரதௌஸ் (53) ஆகிய இருவரையும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.

நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் . காமராஜ், விஜயகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவண சங்கர், முதல் நிலை காவலர்கள் சித்திரைவேல் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil