திருச்செந்தூர் முருகன் கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கை ரூ. 2.42 கோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கை ரூ. 2.42 கோடி
X

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். (கோப்பு படம்).

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அக்டோபர் மாதம் ரூ. 2.42 கோடி உண்டியல் காணிக்கை இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், ஆவணித் திருவிழா, கந்த சஷ்டி விழா ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறுவது உண்டு.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தவது வழக்கம்.

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சையாக கோயில் உண்டியலில் பணம், தங்கம் உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்துவது உண்டு. அவ்வாறு பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

அதன்படி அக்டோபர் மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை என்னும் பணியானது கோயில் வசந்த மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக் குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஈடுப்பட்டனர்.

அதன்படி, அக்டோபர் மாதத்தில் 2 கோடியே 42 லட்சத்து 33 ஆயிரத்து 243 ரூபாயும், தங்கம் 1370 கிராமும், வெள்ளி 25 ஆயிரம் கிராமும், 261 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர் என உண்டியல் எண்ணிக்கை முடிந்த பிறகு கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
Will AI Replace Web Developers