ஆத்தூர் அருகே கடற்கரையில் விளையாடிய மாணவன் மாயம்

ஆத்தூர் அருகே கடற்கரையில் விளையாடிய மாணவன் மாயம்
X
ஆத்தூர் அருகே, கடற்கரையில் விளையாடிய கடலில் சிக்கி மாயமான மாணவரை, அப்பகுதி மீனவர்கள் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் நூறுவீடு பகுதியை சேர்ந்த ரோசில்டன் மகன் ஜாப்ரின் (15), ஏசியா தெருவை சேர்ந்த கில்பர்ட் மகன் அலெக்ஸ் (15), தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆஸ்ரின் (15) ஆகியோர் புன்னைக்காயல் கடற்கரை பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது 3 பேரும் கடல் அலையில் சிக்கி தத்தளித்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அலெக்ஸ் மற்றும் ஆஸ்ரின் ஆகியோரை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்தனர். ஆனால் ஜாப்ரினை மட்டும் காணவில்லை. இதுகுறித்து உடனடியாக கடலோர காவல்படை, தீயணைப்புத்துறை மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் காணாமல்போன ஜாப்ரினை, அப்பகுதி மீனவர்கள் மற்றும் திருச்செந்தூர் தீயணைப்புத்துறை அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கடலில் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!