உடன்குடியில் 350 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 350 கர்ப்பிணி பெண்களுக்கு அமைச்சர் சீதனம் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன் தொகுதி உடன்குடி பகுதியை சேர்ந்த 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வளைகாப்பு சீதனங்களை இன்று வழங்கினார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 வகையான கலவை சாதங்களை பரிமாறினார்.

விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு அமைச்சர் உணவு பரிமாறினார்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

கிராமங்களிலே இருக்கின்ற தாய்மார்களை பாதுகாக்கின்ற வகையிலே மருத்துவர்களும், செவிலியர்களும் வீட்டுக்கே சென்று அவர்களுடைய உடல்நலன்களை பாதுகாப்பு மட்டுமல்ல அவர்களுடைய பேறுகால வசதி பெறுகின்ற வகையிலேயும் ஏற்பாடுகள் செய்து ஆரோக்கியமான குழந்தைகள் பெறும் வரையும் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நல்ல நோக்கத்தோடு இந்ததிட்டம் தொடங்கப்பட்டு இன்று தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் நடைபெறுகின்றது. வளைகாப்புகள் நடைபெறுகின்ற பொழுது நம் வீட்டிலே இந்த வளைகாப்பு நடைபெறவில்லையே என்று யாரும் ஏங்கக்கூடாது என்ற வகையிலே இதுபோன்றுசாதி, சமயத்துக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு தாய்மார்களுக்கும் வளைகாப்பு சீதனங்கள் நடைபெற வேண்டும் உயரிய நோக்கத்தோடு நடைபெறுகிறது.

எல்லோரையும் அரவணைத்து தமிழ்நாடு அரசாங்கத்தின் மூலம் இந்த வளைகாப்புக்கு நடத்துகின்ற நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. அந்த வகையிலே இங்கு வந்திருக்கின்ற தாய்மார்கள் இங்கே நம்முடைய திட்ட அலுவலர்கள் சொன்னதுபோல் அவர்களுடைய குழந்தைகளை பாதுகாக்கின்ற வகையிலே என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்களளோ அந்த அறிவறுத்தலை மேற்கொண்டு அந்த பணிகளை நீங்கள் செய்யவேண்டும்.வாழ்வாங்கு வாழவேண்டும். இன்றைக்கு வளைகாப்பு செய்கின்ற வகையில் இங்கே வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தி,மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர், உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் திட்ட அலுவலர் தனலெட்சுமி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோகிலா, வட்டாட்சியர் முருகேசன், உடன்குடி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், துணை தலைவர் மீரா, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் ஜெசிராணி, குழந்தை வளர்ப்பு திட்ட அலுவலர் திருச்செந்தூர் இந்திரா, குழந்தை வளர்ப்பு திட்ட அலுவலர் உடன்குடி ஜெயா துரைப்பாண்டியன், முக்கிய பிரமுகர்கள், செங்குளி ரமேஷ், ஜெகன், ஜான்பாஸ்கர், அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!