குலசை தசரா விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி. நேரில் ஆய்வு
குலசை கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.
குலசேகரன்பட்டினத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மைசூரு தசரா விழாவுக்கு அடுத்தப்படியாக பல லட்சம் பேர் திரண்டு வருவதால் குலசை தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும்.
இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா குலசை முத்தாரம்மன் கோயிலில் கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது. தசரா விழாவிந் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 24 ஆம் தேதி இரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இதனையடுத்து 25 ஆம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.
தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் கூடும் நாட்களான 22.10.2023 முதல் 25.10.2023 ஆகிய 4 நாட்களுக்கு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் குறித்தும் தற்காலிகமாக வாகன நிறுத்துமிடங்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் காவல் துறையினருக்கு வழங்கினார்.
அப்போது, காவல் துணை கண்காணிப்பாளர்கள் வசந்தராஜ் (திருச்செந்தூர்), மாயவன் (ஸ்ரீவைகுண்டம்) அருள் (சாத்தான்குளம்) புருஷோத்தமன் (ஆயுதப்படை), குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu