சமுதாய மோதலை தூண்டும் திமுக வேட்பாளர்- புகார் அளிப்பு

சமுதாய மோதலை தூண்டும் திமுக வேட்பாளர்- புகார் அளிப்பு
X

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் சமுதாய மோதலை தூண்டும் விதமாக செயல்படும் திமுக வேட்பாளர் அனிதா.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கம் சார்பில் 500 க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து திருச்செந்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவளித்து வருகிறது.இந்நிலையில் திமுக வேட்பாளர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர் பில்லாஜெகன், திமுக மாணவரணி துணை பொதுச்செயலாளர் உமரி சங்கர், ரவி, தங்கம் ஆகியோர் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் சமுதாய மோதல்களை தூண்டும் விதமாக செயல்படுவதாகவும், அதிமுக விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஆதரவு திரட்டியவர்களிடம் நேரடியாகவும், செல்போன் மூலம் மிரட்டுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடபட்டுள்ளது.

Tags

Next Story