குலசேகரன்பட்டினத்தில் ரூ.4.50 கோடியில் திட்ட பணிகள்: அமைச்சர் ஆய்வு

குலசேகரன்பட்டினத்தில் ரூ.4.50 கோடியில் திட்ட பணிகள்: அமைச்சர் ஆய்வு
X

குலசேகரன்பட்டிணம் கடற்கரையில் மத்திய அரசின் சுதேசி தர்சன் திட்டத்தில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

குலசேகரன்பட்டிணம் கடற்கரையில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆய்வு

குலசேகரன்பட்டிணம் கடற்கரையில் மத்திய அரசின் சுதேசி தர்சன் திட்டத்தில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வசதி, கழிப்பிடம், வாகனம் நிறுத்தும் இடம், தகவல் மையம், பூங்கா, சிசிடிவி கேமிரா உள்ளிட்ட பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் வெங்கடராமானுஜபுரம் ஊராட்சி கலியன்விளையில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் பிறைக்குடியிருப்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நிழற்குடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் வெங்கடராமானுஜபுரம் ஊராட்சி கலியன்விளையில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் பிறைக்குடியிருப்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நிழற்குடையினை ஆகிய திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் இன்று (30.08.2021) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, உடன்குடி ஊராட்சி ஒன்றியம் வெங்கடராமானுஜபுரம் ஊராட்சி கலியன்விளையில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் பிறைக்குடியிருப்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நிழற்குடை ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் வெங்கடராமானுஜபுரம் ஊராட்சி கலியன்விளை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்றைய தினம் 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் வசிக்கும்; குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்ட நிழற்குடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து குலசேகரன்பட்டிணம் கடற்கரையில் மத்திய அரசின் சுற்றுலாத்துறையின் மூலம் சுதேசி தர்சன் திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வசதி, கழிப்பிடம், வாகனம் நிறுத்தும் இடம், தகவல் மையம், பூங்கா, சிசிடிவி கேமிரா மற்றும் கடற்கரை சுத்தம் செய்யும் இயந்திரம் ஆகியவை தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் மூலம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் உள்ளது இவற்றை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவி, உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், இ.கா.ப., வட்டாட்சியர் முருகேசன், உடன்குடி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், பொற்செழியன, முக்கிய பிரமுகர்கள் செங்குளி ரமேஷ், ஜெகன், ராமஜெயம், வால்சுடலை மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story