பிரதமர் மோடி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டி அங்க பிரதட்சணம்

பிரதமர் மோடி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டி அங்க பிரதட்சணம்
X

திருச்செந்தூர் கோவிலில் பாஜக இளைஞர் அணியினர் அங்கபிரதட்சணம் செய்தனர்.

பிரதமர் மோடி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டி பா.ஜ.க. இளைஞரணியினர் திருச்செந்தூரில் அங்கபிரதட்சணம் செய்தனர்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது என்றே கூறலாம். இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் 108 இளைஞரணி நிர்வாகிகள் அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செய்தனர்.


தொடர்ந்து, அவர்கள் கூறியதாவது:-

மோடியை ஒரு தமிழராகவே பார்க்கிறோம். அவரைப் போல தமிழுக்கு புகழை சேர்த்த ஒரு தலைவர் வரலாற்றில் இல்லை. இந்தியாவிலேயே அதிகமான சுதந்திரப் போராட்ட வீரர்களை கொடுத்த பகுதி தூத்துக்குடி மாவட்டம் ஆகும். தமிழ்நாட்டின் விடுதலை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தே எழுதப்பட வேண்டும்.

சுதந்திரத்திற்காக தங்களுடைய உயிரையே கொடுத்த வீரர்களின் வரலாறை உலகிற்கு எடுத்துச் சொல்லவும், தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சி பெறவும், தமிழ் கடவுள் முருகனிடம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த 108 இளைஞரணி நிர்வாகிகள் அங்கப்பிரதட்சணம் செய்தும் பால்காவடி எடுத்தும் பாரத பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளோம் என்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகளின் என 108 இளைஞர்கள் அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings