திருச்செந்தூரில் காவல்துறை, துணை ராணுவத்தினனரின் கொடி அணிவகுப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் போலீசார், துணை ராணுவத்தினர் கலந்து கொண்ட கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், தேர்தல் செலவின பார்வையாளர் குந்தன் யாதவ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தொடங்கி, மெயின் ஆர்ச், டி.பி ரோடு, வேலந்தம்மன் கோவில் தெரு, வடக்கு ரதவீதி, இரும்பு ஆர்ச் வழியாக ராஜ் மஹாலில் வந்து கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து திருச்செந்தூர் ராஜ்மஹாலில் வைத்து தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வின்போது திருச்சந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி ஏ.கே.லேம்கான், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது, உதவி ஆய்வாளர்கள் மற்றும் அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர் 90 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!