சிறைத் தண்டனையை மறைத்ததாக நாலுமாவடி ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவி நீக்கம்..!

சிறைத் தண்டனையை மறைத்ததாக நாலுமாவடி ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவி நீக்கம்..!
X

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ்.

நாலுமாவடி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜேஷ் தேர்தல் பிரமாண பத்திரத்தில் சிறை தண்டனையை குறைத்து காண்பித்ததால், பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

நாலுமாவடி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜேஷ் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சிறை தண்டனையை குறைத்து காண்பித்ததால், நீதிமன்ற உத்தரவுப்படி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாலுமாவடி ஊராட்சி மன்றத்தில் ராஜேஷ் என்பவர் 7 ஆவது வார்டில் போட்டியிட்டு வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஷ் தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை தெரிவித்ததாக கூறப்பட்டது.

அதாவது, சத்திய பிரமாண பத்திரத்தில் ராஜேஷ் கொலை வழக்கில் அனுபவித்த 7 ஆண்டு சிறைத் தண்டனையை இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையாக குறைத்து தாக்கல் செய்துள்ளார் என தகவல் வெளியாகியது. இதுகுறித்து நாலுமாவடியை சேர்ந்த அழகேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தேர்தல் ஆணையம் ஒப்புதல் பெற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல் படி ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆணையாளர் பாக்கியலீலா விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையைத் தொடர்ந்து, கொலை வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதை இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதாக பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்திருந்த நாலுமாவடி ஊராட்சி மன்ற 7 ஆவது வார்டு உறுப்பினர் பதவியையும், துணைத் தலைவர் பதவியையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்