கிராம மக்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிய கனிமொழி எம்.பி.

கனிமொழி ஏற்பாட்டில் பேருந்து இயக்கப்பட்டதைத் தொடர்ந்து உற்சாகமாக வரவேற்பு அளித்த கிராம மக்கள்.
Villupuram To Tiruchendur Bus-தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள நங்கைமொழி ஊராட்சியில், மக்கள் களம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பொதுமக்கள் பலர் தங்கள் நங்கைமொழி கிராமத்தில் இருந்து அடைக்கலபுரம் ஊராட்சிக்குப் பேருந்து வசதி வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் கனிமொழி எம்.பி. ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி முயற்சியால் சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி வரை செல்லும் பேருந்து தடம் எண் 65 பி நேற்று மாலை ஆறு மணி நங்கைமொழி கிராமத்திற்கு வந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆறு இருபது மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
அந்த பேருந்து தினமும் காலை 7:45 மணிக்கு மற்றும் மாலை 6:15 மணிக்கு நங்கைமொழி கிராமத்துக்கு வரும் என மக்களிடம் சாத்தான்குளம் பணிமனை சார்பாக தெரிவிக்கப்பட்டது. தங்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேறியதைத் தொடர்ந்து நங்கைமொழி ஊராட்சியை சேர்ந்த மக்கள் இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேருந்தை வரவேற்றனர்.
மேலும், தங்களது கோரிக்கையை ஏற்று ஒரே நாளில் பேருந்து வசதி செய்துக் கொண்ட கனிமொழி எம்.பிக்கு நங்கைமொழி கிராம மக்கள் நன்றியை தெரிவித்து உள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu