/* */

தூத்துக்குடியில் பால் வியாபாரி கொலை வழக்கு : தந்தை, மகன் நீதிமன்றத்தில் சரண்.

தனது மோட்டார் சைக்கிளை தெருவில் வைத்து கழுவி உள்ளார். அப்போது, தண்ணீர் காரின் மீது தெறித்துள்ளது

HIGHLIGHTS

தூத்துக்குடியில் பால் வியாபாரி கொலை வழக்கு : தந்தை, மகன் நீதிமன்றத்தில் சரண்.
X

தூத்துக்குடியில் பால்வியாபாரி கொலை வழக்கில் தந்தை மகன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (61). பால் வியாபாரி. இவருடைய மகன் கடந்த 14- ஆம் தேதி புதிதாக வாங்கிய காரில் கோவிலுக்கு செல்வதற்காக தெருவில் நிறுத்தி இருந்தார். அப்போது எதிர்வீட்டை சேர்ந்த சுப்பையா மகன் பிரகாஷ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை தெருவில் வைத்து கழுவி உள்ளார். அப்போது, தண்ணீர் காரின் மீது தெறித்துள்ளது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

நேற்று இரவு ஆவுடையப்பன் சந்திரேசன் நகரில் உள்ள அவருக்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பையா, அவரது சகோதரர் நாராயணன், சுப்பையா மகன்கள் பிரகாஷ், ராம்ஜெயந்த் மற்றும் சிலர் சேர்ந்து ஆவுடையப்பனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதனை தடுக்க சென்ற அவரது மகன் பெருமாள் (29) என்பவரையும் அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த பெருமாள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து ஊரக டிஎஸ்பி சந்தீஷ் மேற்பார்வையில், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் கொலையாளிகளை பிடிப்பதற்கான தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தொடர்ந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் சுப்பையா மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆகிய 2 பேரும் ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். தொடர்ந்து அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Updated On: 18 Oct 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாக்குப்பதிவின் போது வெடித்த வன்முறை! குளத்தில் வீசப்பட்ட...
  2. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம், மீனாட்சி கோயிலில் உண்டியல் திறப்பு
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு |...
  4. லைஃப்ஸ்டைல்
    முதலிரவில் பாலும் பழமும் ஏன் கொடுக்கிறோம்..? அறிவியலும் கலாசாரமும்..!
  5. நாமக்கல்
    வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: நாமக்கல் ஆட்சியர்
  6. சினிமா
    சரவணன் - மீனாட்சி இணை பிரியப் போறாங்களா? இப்பதான குழந்தை பிறந்தது?
  7. நாமக்கல்
    நீர்வழிகளை மறைத்து அரசுக்கு வரைபடம்: எஸ்.பியிடம் விவசாயிகள் புகார்
  8. தொழில்நுட்பம்
    குழந்தைகள் உண்மையில் யாரை நம்புகிறார்கள்? அதிர வைக்கும் ஆய்வு...
  9. வீடியோ
    🔴LIVE : 11 மணிநேர நீண்ட தியானத்தின் இரண்டாம் பகுதியை தொடங்கினார் பாரத...
  10. தொழில்நுட்பம்
    வேற லெவல் டெக்னாலஜி! ஆண் தாவரத்திற்கு ஜோடி தேடும் ஆர்டிபிசியல்...