குலசை தசரா விழா: தற்காலிக மின் இணைப்பு பெற விரும்புகிறீர்களா?

குலசை தசரா விழா: தற்காலிக மின் இணைப்பு பெற விரும்புகிறீர்களா?
X
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி, தசரா குழுக்கள் தற்காலிக மின் இணைப்பு பெறலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான தசரா விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அக்டோபர் 24 ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் காப்பு அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து தசரா குழுக்கள் அமைத்து கோயிலுக்கு வருவது வழக்கம். அவ்வாறு கோயில் தசரா விழாவுக்கு வரும் குழுக்கள் தற்காலிகமாக குடில்கள் அமைப்பது உண்டு. அந்த குடில்களுக்கு தற்காலிக மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என மின்வாரியம் தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து திருச்செந்தூா் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளா் விஜயசங்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி, திருச்செந்தூா் கோட்ட பகுதிகளில் தசரா பந்தலுக்கு தேவையான விளக்குகள், தெருக்களில் அலங்கார விளக்குகள், தற்காலிக கடைகள் அமைக்க மின் இணைப்பு பெற இணையதளம் மூலம் பதிவு செய்து தங்கள் பிரிவிற்கு உட்பட்ட அலுவலகத்தில் சமா்ப்பித்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது..

எனவே, பொதுமக்கள், பக்தா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். மேலும் விவரங்களுக்கு உதவிப் பொறியாளா்களை திருச்செந்தூா் - 9445854802, காயாமொழி - 9445854805, பரமன்குறிச்சி - 9445854806, காயல்பட்டினம் - 9445854810, ஆறுமுகனேரி - 9445854808, குரும்பூா் - 9445854809, சாத்தான்குளம் (நகா் ) - 9445854812, சாத்தான்குளம் (கிராமம்) - 9445854716, பழனியப்பபுரம் - 9445854813, நாசரேத் - 9445854815,

ஆழ்வார்திருநகரி - 9445854817, மெஞ்ஞானபுரம் - 9445854816, உடன்குடி (நகா்) - 9445854820, உடன்குடி (கிராமம்)- 9445854821, படுக்கப்பத்து - 9445854822, நடுவக்குறிச்சி - 9445854823 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என திருச்செந்தூா் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளா் விஜயசங்கர பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!